தன்முனை இலக்கியத் தூறல்
தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர் எழுத்தாளர் #கன்னிக்கோவில்_இராஜா.
புதுக்கவிதை, ஹைக்கூ மற்றும் கிளைவடிவங்கள், நவீனக் கவிதை, சிறார் இலக்கியம் எனப் பன்முகம் கொண்டு விளங்கி வருபவர் நூலேணி மற்றும் லாலிபாப் சிறுவர் உலகப் பதிப்பகங்கள் மூலம் எண்ணற்ற படைப்பாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வருகிறார்.
வடிவமைப்புத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், அண்மையில் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமான 'தன்முனைக் கவிதை வடிவத்தை எழுத பலரையும் ஊக்குவித்தது மட்டும் அல்லாமல் அவர்களின் படைப்புகளைப் பதிப்பித்துள்ளார்.
#நூலேணி_பதிப்பகம் வாயிலாக வெளிவந்த தன்முனைக் கவிதை நூல்களுக்கு திறனாய்வுப் பார்வையில் அணிந்துரை, வாழ்த்துரைகளைக் கட்டுரைகளாக எழுதியுள்ளார்.
தன்முனை வரலாற்றில் திறனாய்வுப் பார்வைக் கட்டுரைகள் (அணிந்துரை/வாழ்த்துரை) வெளிவருவது இதுவே முதல் முறை.
இந்நூலில் 25-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆய்வு மாணவர்களுக்கு இது ஒரு சிறப்புக் கையேடாக இருக்கும்.
நூலேணி பதிப்பகம் Nooleni publications மார்ச் 2025ல் 'தன்முனைத் திருவிழா' நடத்தி, 20-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தன்முனை வரலாற்றில் கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
இந்த நூல் வாசகர் பார்வையில் தன்முனைத் தேன்கூடாக இருக்கும். இந்த நூலின் வருகை தன்முனை இலக்கிய உலகிற்கு சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
இந்த திறனாய்வு நூலில் என்னுடைய 6 நூல்கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
#திருப்பாவைத்_தன்முனை
#அடை_மழைக்குள்_தனிக்குடை
#வாசமல்லி_பூத்திருக்கு
#சூரரைப்_போற்று
#தன்முனைத்_தமிழி
#சோர்விலாள்_பெண்
- நெல்லை அன்புடன் ஆனந்தி
நிறுவுநர், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம்
அமெரிக்கா.


Comments
Post a Comment