#தன்முனைக்கவிதைகள்_போட்டி
#தன்முனைக்கவிதைகள்_போட்டி
யார் எழுத்தாளர்கள்?
எதற்காக எழுதுகிறார்கள்?
யாருக்காக எழுதுகிறார்கள்?
இப்படி பலரது மனதில் கேள்கிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வள்ளுவன் என்ற எழுத்தாளனின் திருக்குறள் உலகப் பொதுமறையாகி விடை அளிக்கிறது.
யார் எவர்? என்ற நூலைக் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தொகுத்தார். அதன்பின்னர் டாக்டர் பூவண்ணன் தொகுத்தார். மலர் பதிப்பகம் வாயிலாக எழுத்தாளர் பன்னீர்செல்வம் அவர்களோடு நானும் (கன்னிக்கோவில் இராஜா) இணைந்து தொகுத்தோம். கல்பாக்கத்தில் வசிக்கக்கூடிய எழுத்தாளர் ஆர்.வி. பதி தொகுத்துள்ளார்.
முன்னதாக 'எதற்காக எழுதுகிறேன்' என்ற தலைப்பில் சி.சு. செல்லப்பா தொகுத்திருக்கிறார். 'கண்ணியம்' இதழ் நடத்தி வந்த திரு.குலோத்துங்கன் அவர்கள் பல கவிஞர்களின் தன்குறிப்பை நூல்களாக்கி இருக்கிறார்.
இன்னும் பலர் தொகுத்திருக்கக்கூடும்
ஒவ்வொரு படைப்பாளியும் தன்னளவில் தன் படைப்பினூடே வெளிச்சாமாகிறான். பிறருக்கு வெளிச்சம் தருகிறான் என்று நான் சொல்வேன்.
அந்த வகையில் ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, தன்முனைக் கவிதை, கட்டுரைகள் என பன்முகத் திறமையோடு வலம் வரும் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களின் 70ஆவது பிறந்தநாளை (பிளாட்டினம் பிறந்தநாள்)
நூலேணி பதிப்பகத்தோடு கொண்டாட அமெரிக்காவில் வசித்துவரும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி (ஆசிரியர்: நூலேணி மாதஇதழ்) ஆர்வம் காட்டினார். அதனால் உருவான யோசனை தன்முனைக் கவிதைகள் போட்டியாக மலர்ந்துள்ளது.
வாசகர்கள், படைப்பாளிகள் கலந்து கொண்டு வாழும்போதே வரலாறு படைக்கும் தன்முனை நாயகருக்கு கவிமாலை சூட்டலாம் வாருங்கள்.
போட்டியில் கலந்து கொள்ளுங்கள். வெற்றி பெறுங்கள்.
போட்டிக்கு அனுப்பப்படுகிற கவிதைகளை தொகுத்து புத்தகமாக்க ஆயத்தமாகிறது நூலேணி பதிப்பகம்
- #கன்னிக்கோவில்_இராஜா

Comments
Post a Comment