பாரதி ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொ
ருள் ஒன்றே;
அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
தன்முனைக் கவிதைகளில் பல்வேறு முயற்சிகள் பல படைப்பாளர்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதில் என்னுடைய பங்களிப்பாக...
• #அவளின்_நாட்குறிப்பேடு 2021 (அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் தன்முனைக் கவிதைகள் நூல்)
• #தன்முனைத்தமிழி 2023 (கல்வெட்டுத் தமிழியில் தன்முனைக் கவிதைகள்)
• #சோர்விலாள்_பெண் 2024 (திருக்குறள் தன்முனைக் கவிதைகள்)
• #உறைபனி_உதிர்த்த_இறகு 2024 (பன்னாட்டுப் படைப்பாளர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல்)
• #வாசமல்லி_பூத்திருக்கு 2025 (தன்முனைத் திருவிழாவில் வெளியிடப்படும் நூல்)
இந்த வரிசையில்...
மகாகவி பாரதியின் 'புதிய ஆத்திசூடியில்' தன்முனைக் கவிதைகள் எழுதியுள்ளேன்.
#சூரரைப்_போற்று என்ற இந்நூல்
வரவிருக்கும் தன்முனைத் திருவிழாவில் #நூலேணி_பதிப்பகம் வழியாக வெளியிடப்பட இருக்கிறது என்பதை ஆவலுடன் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
நூலேணி பதிப்பகம்
நூலேணி - புத்தக வீதி Book Street



Comments
Post a Comment