அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில் அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு 12-10-2025 ஞாயிறு காலை தாம்பரம், வள்ளுவர் குருகுலம் பள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை வாயிலில் நடைபெற்றது.. கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய ‘தன்முனைக் கவி ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள் வெளியிட முனைவர் வே.புகழேந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் எழுதிய ‘தன்முனைத் தளிர் ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் வெளியிட கவிஞர் தா.உமா அவர்கள் பெற்றுக் கொண்டார். பாவலர் கல்லை மலரடியான் அவர்கள் எழுதிய ‘தன்முனை மலர் ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி அவர்கள் வெளியிட கவிஞர் புதுகை ஆதீரா அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நூலின் வெளியீட்டு விழாவில் முனைவர் வே.புகழேந்தி, கவிஞர் கவிநிலா மோகன...