தன்முனைக் கவிதைப் போட்டி - பரிசு
அமெரிக்கத் தன்முனைக் கவிதைக் கூடம் நடத்திய தன்முனைக் கவிதைப் போட்டி - பரிசு நூலேணி பதிப்பகம் தொடர்ந்து தன்முனைக் கவிதை நூல்களை வெளியிட்டு வருகிறது. சென்ற 2024ஆம் தன்முனைக் கவிதைகள் குழுமத்தோடு இணைந்து ‘தன்முனைத் திருவிழா’ நடத்தியது. அந்த விழாவில் இருபதுக்கும் மேற்பட்ட தன்முனைக் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தன்முனைக் கவிதைகளுக்காக ‘அமெரிக்கத் தன்முனைக் கவிதைக் கூடம்’ என்ற முகநூல் குழு தொடங்கப்பட்டது. இந்தக் குழுவை அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் நிறுவி, இயக்குநராக இருக்கிறார். சென்னையில் வசிக்கும் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா இணை இயக்குநராக இருக்கிறார். அமெரிக்கத் தன்முனைக் கவிதைக் கூடம் மாதம் ஒரு போட்டியை நடத்த முடிவெடுத்து நவம்பர் மாதம் ‘தமிழும் நானும்’ என்னும் கருப்பொருளில் முதல் போட்டியை நடத்தியது. அந்தப் போட்டிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, நோர்வே எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படைப்பாளர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த 41 கவிதைகளில் இருந்து மூன்று கவிதைகள் சிறப்புப் பரிசுகளுக்குத் தேர்வாகின. முதல் பரிசை கவிஞ...